பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

78




2. பிறகு, நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு தோள்களில் கைகளை வைத்தவாறே முன்னும் பின்னுமாக சுழற்றவும். (Rotate) முன்புறமாக 5 தடவையும் பின்புறமாக 5 தடவையும் சுழற்றவும். பிறகு மூச்சை விடவும்.

7. (1) மல்லாந்து படுத்துக் கொண்டு, முழங்கால்களை சற்று முன்னே கொண்டு வந்து மடித்துக் கொண்டு, கைகளை இருபுற பக்கவாட்டிலும் நன்றாக நீட்டிக் கொள்ள வேண்டும்.

2. ஒவ்வொரு கையிலும் ஏதாவது எடையை வைத்துக் கொண்டு, (புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை) இரண்டு கைகளையும் மார்புக்கு மேலே வரும்படி கொண்டு வந்து, அங்கிருந்து, முழங்கால்களின் பக்கவாட்டிற்குக் கொண்டு போக வேண்டும். அதுவரையிலும் மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

பின்னர் முதல் நிலைக்கு வந்தவுடன், மூச்சை விட்டு விடவும். 20 முறை செய்யவும்.

8. (1) தண்டால் எடுப்பது போன்ற பயிற்சி இது. முதலில் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கைகளை நன்றாக மடித்து, உள்ளங்கைகள் தரைப்பக்கம் பார்த்திருப்பது போலவும், தோள்களுக்குக் கீழே கைகள் மடிந்திருப்பது போலும் படுத்துக் கொள்ளவும்.

2. நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு, கைகளை நிமிர்த்தவும். இடுப்புக்கு மேற்பகுதியான மார்பும்,தலையும் மட்டுமே உயர வேண்டும் இடுப்பும்,கால்