பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பகுதிகளும் அப்படியே தரையோடு தரையாக இருப்பது போல வைத்துக் கொண்டு மார்புப் பகுதியை மட்டும் உயர்த்தவும்.

படுத்த நிலைக்கு வரும்போது மூச்சை வெளியே விடவும். 20 முறை செய்யவும்.

இடுப்புக்கும் வயிற்றுப் பகுதிகளுக்குமான பயிற்சிகள்.

9. (1) கால்களை நன்கு அகலமாக விரித்து நின்று, கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தி, கோர்த்துப் பிடித்துக் கொண்டு, அண்ணாந்து பார்த்தபடி நிற்கவும்.

2. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, (சேர்ந்திருக்கும் கைகளை பிரிக்காமல்) இடப்புறமாக

வளைந்து, அப்படியே கீழே குனிந்து இடது காலைத் தொடவும். (முழங்கால்களை வளைக்காமல் செய்யவும்.)

பிறகு, முதல் நிலைக்கு வந்த பிறகு மூச்சை விடவும் அடுத்த முறை வலதுபக்கமாகக் குனியவும். 20 முறை செய்க.

10. (1) ஒன்பதாவது பயிற்சிக்கு நிற்பது போல, முதலில் நிற்கவும்.

2. பிறகு, நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு முன்புறமாகக் குனியவும். முன்புறத் தரையைத் தொடலாம். அல்லது பிரிந்து கால்களுக்கிடையேயுள்ள பின்புறத் தரையை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு