பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




சாதாரணமாக மெதுவாக நடப்பதை விட, சற்று சுறுசுறுப்பாக, ஒரு இதமான வேகத்துடன் நடந்தால் (Brisk walking) அது நாடித்துடிப்பை அதிகமாக்கும். இருதயத்தை வலிமைப்படுத்தும். நுரையீரல்களின் செயல்திறனை மிகுதியாக்கும். கால்களையும் நல்ல வலிமையுடையதாக்கும்.

கனமான உடல் உள்ளவர்கள் முதலில் காற்றோட்டமுள்ள இடங்களில் நடைப்பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். உழைப்பில்லாத மக்கள் கூட, இன்னும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட பயிற்சிக்காக நடக்கலாம்.

இந்த நடைப் பழக்கத்தில் மகிழ்ச்சி கொள்பவர்கள் நலம் பெறுவதிலும் மேன்மை மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள்.