பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எண்ணம் ஏற்பட்டவுடன், நீங்கள் உங்கள் மருத்துவரைக் கொஞ்சம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். அதாவது ஏதாவது நோய்க்குள் இடறி விழுந்திருப்பவர் மட்டும்.

இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்த ஒட்டம் இணையற்ற சக்தியை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்நாள் முழுவதும் வலிமையுடனும் பொலிவுடனும் வாழச் செய்து வழி காட்டுகிறது. இது எப்படி என்றால், மற்ற உடற்பயிற்சிகளைப் போலவே இதுவும் வளமாக உதவுவதால் தான்.

எங்கே ஒடலாம்?

எங்கெங்கே ஒட வசதியான இடம் இருக்கிறதோ, அந்த இடங்களிலெல்லாம் ஒடலாம். புல்தரையோ, கடற்கரையோ, பூங்காக்களோ, அல்லது தெரு ஒரங்களிலோ, வசதிக்கேற்ப ஒடி மகிழலாம்.

அதிகாலை நேரமோ அல்லது அந்தி நேரமோ ஏதாவது ஒரு பொழுது ஒடிக்கொள்ளலாம்.

ஆரம்ப நாட்களில் 3 லிருந்து 5 நிமிடம் வரை ஒடலாம். ஒடிப் பழகுகிற ஒவ்வொருவரும் தான் தினமும் எவ்வளவு நேரம் ஒடுகிறோம் என்பதை ஒரு நோட்டில் எழுதிக் குறிப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொறுப்புடன் எழுதி வைத்து, சிறப்பான ஓர் அமைப்புடன், தினமும் ஒடிப் பழகுகிற ஒட்டக்காரர்கள் உடலில் புத்துணர்ச்சியைப் பெறுவதுடன் உறங்கும் போது சிறந்த மனோ நிலையுடன் ஆழ்ந்து உறங்குவர்.