பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

90



நன்றாகப் பசியெடுத்து நிறைய சுவைத்து உண்ட பிறகுக் கூட, ஓடுபவரது உடல் எடை ஒருவிதக் கட்டுப் பாட்டுக்குள்ளே தான் அடங்கி இருக்கும்.

உடலில் அதிகக்கணம் உள்ளவர்கள் கூட, குறிப்பிட்ட சில தினங்கள் கொஞ்சங் கொஞ்சமாக ஓடி, 8 முதல் 12 கிலோ எடையைக் குறைத்திருக்கின்றனர்.

நாடித்துடிப்பு :

சாதாரண ஒரு மனிதருக்கு 1 நிமிடித்திற்கு நாடித்துடிப்பு 72 முறை என்று கூறுவார்கள். ஓட்டத்தில் ஈடுபட்டு நன்கு பழக்கப்பட்டவர்களுக்கு, நாடித்துடிப்பு 60 முதல் 66 வரை இருக்கும். ஏனென்றால் இதயம் அவ்வாறு வலிமை பெற்றுக் கொள்கிறது. ஆனால் ஒன்று, நீங்கள் ஓட்டத்தில் இருக்கும் போது, நாடித்துடிப்பு ஏறக்குறைய 120 முதல் 130 வரை இருப்பது போல் அமையவேண்டும். அதாவது, உங்கள் இயல்பான நாடித்துடிப்பை விட, குறைந்தது 50 சதவிகிதம் அதிகரிப்பது போல் ஓடினால், சிறப்பான நன்மைகளைப் பெற முடியும்.

தற்போதைய வாழ்க்கை அமைப்பில், வயதுக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற வயது என்று எதுவும் குறிப்பிட்டுக் கூற முடியாத நிலை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் எந்த வேலைக்கு, எந்த வயதுக்கு எவ்வளவு உழைப்பு என்பதையும் நிர்ணயித்துக் கூறிவிட இயலாத, நிலை ஏற்பட்டிருக்கிறது.