பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

92



2. முதல் கட்டத்தைத் தாண்டியவர், தமது உடலில் கொஞ்சம் சக்தி சேர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாவார்கள்.

ஆரம்ப நிலையில் கொஞ்சங் நேரங்கூட உடல் உழைப்பில் ஈடுபட முடியாதவர்கள், 2 வது நிலையில் உடலுக்குக் களைப்புத் தெரியாமல் ஒடுகிற ஆற்றலை அடைந்து விடுகின்றார்கள். இவர்கள் தொடர்ந்தாற்போல் 30 முதல் 35 நிமிட நேரம் வரை ஒடுகிற உறுதியான உடலையும் மனோபக்குவத்தையும் வளர்த்துக் கொண்டு விடுகின்றார்கள்.

3. மெது ஓட்டத்தில் விருப்பம் அதிகமாகி மிக எளிதாக ஒடுவதற்கேற்ற உடல் பக்குவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிற இவர்கள், தொடர்ந்தாற் போல் 40 நிமிட நேரம் வரை ஒடத்தகுந்தவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

இவர்கள் மெதுவாக ஒட்டம் ஒடுவதுடன், 300 மீட்டர் தூரத்தை 1 நிமிடத்திற்குள்ளும், 12 கிலோமீட்டர் தூரத்தை 1 மணியில் கடந்து விடுமாறு ஒடி முடிக்கின்ற உடல் வலிமை பெற்றவர்களாகி விடுகின்ற உடல் நிலையில் தேர்ந்தவர்களாகிவிடுவது தான் இந்த ஓட்டத்தின் ஒப்பற்ற சாதனையாகும்.

4. இளமைக் காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக, வீராங்கனைகளாக இருந்தவர்கள், வயது முதிர்ந்தவர்களாகும் போது, முன்பு இருந்த தேகநிலையை