பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 மீண்டும் கைவரப் பெறும் வாய்ப்பினை இந்த மெது ஒட்டம் அளிக்கிறது. இவர்கள் 1 மணிக்குள் 15 கிலோ மீட்டர் தூரம் ஒடுகின்ற வல்லமையைப் பெறுவது தான் இந்த ஓட்டத்தின் நோக்கமாக அமைகிறது.

எது எப்படியிருந்தாலும், மெது ஒட்டம் உடலுக்கு இதமாகவும் மனதுக்கு ஆறுதலாகவும் அமைகின்றதாகும். இன்பகரமான பொழுதுபோக்கு, எதிர்காலத்தை ஏற்றம் மிகுந்ததாகச் செய்யும் இனிய பயிற்சி என்று இதில் ஈடுபடுபவர்கள் தாம் எதிர்பார்த்த பயன்களைப் பெற்று உயர்வடைந்திருக்கின்றார்கள். அந்த ஒப்பற்றவர்களின் வரிசையிலே நீங்களும் ஒருவராகத் திகழலாமே! மகிழலாமே!!