பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

ஒரு யோசனை!




உடல் எடை எவ்வளவு இருக்கலாம். எப்படி இருக்க வேண்டும் என்று தொடங்கி, உணவு அளவையும் ஒரு விதமாக விளக்கி, கட்டுப்பாட்டில் எவ்வாறு காலம் தள்ள வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து கூறிக்கொண்டே வந்திருக்கிறோம்.

இறுதியாக ஒரு யோசனையை உங்களுக்குக் கூறி விட்டால், நீங்கள் வருங்காலத்தில் வளமாக வாழ உதவும் என்ற நம்பிக்கையில் மீண்டும் தொடர்கிறோம்.

வாழ்க்கையில் வயிறு தான் பிரதான பாகத்தை வகிக்கிறது. வயிற்றுப் பிரச்சினைக்குப் பணம் சேர்த்து விட்டால் போதும் என்று தான், பாமரர்களிலிருந்து படித்தவர்கள் வரை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகில் உள்ள உணவு சுவைகளையும், உடல் சுகங்களையும், வாச உணர்வுகளையும், பாச நினைவுகளையும் அனுபவிக்க உதவுகின்ற உடலைப் பற்றி பலர் மறந்தே போகின்றார்கள்.