பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 உணவை ரசிக்க, உலகை ரசிக்க, உடல் நலமாக இருந்தால் தான் முடியும் என்று ஓங்கிப் பேசிவிட்டு, உடல் வீங்கும் போது, சுருங்கும் போது, அவர்கள் படும்பாடு, பாவமாகத்தான் இருக்கிறது.

நீங்கள் உடலை உங்கள் உற்ற நண்பரைப் போல எண்ணுங்கள். ஏற்ற உதவிகளைப் பண்ணுங்கள்.

நீங்கள் உங்கள் உடலைப் பாதுகாத்தால், பராமரித்து வந்தால், நாலாயிரம் நண்பர்கள் நல்குகின்ற உலக இன்பங்களை உடல் உங்களுக்கு வாரி வழங்கும்.

உடலுக்கு எடையை அளித்து, சுமக்கச் செய்யாதீர்கள். செம்மாந்து நடக்க விடுங்கள்.

வயிற்றிலே சுமைகளை நிரப்பி சரியவிட்டு, கஷ்டப்படாதீர்கள். வயிற்றை சிறக்கவிட்டு, நிமிர்த்தி நில்லுங்கள். உங்கள் வாழ்வே பரிபூரணமாக ஜொலிக்கும்.

உணவு எங்கேயும் போய் விடுமோ என்று பயப்படுவது போல, பெருந்தீனி தின்னும் பழக்கத்தை விட்டு ஒழியுங்கள். பசி தீர, வயிறு குளிர, உடல் சுறுசுறுப்படைய, உள்ளம் மகிழ, உறுப்புக்கள் சிலிர்த்துப் பணியாற்ற இப்படி உதவுவதுபோல உண்ணுங்கள்.

மேலே கூறிய முறைகள் எல்லாம், மனிதர்கள் செய்யக் கூடாத, செய்யவே முடியாத காரியங்கள் அல்ல.

கொஞ்சம் மனக்கட்டுப்பாடு, வாயடக்கம், நாவடக்கம் தேவை. அவ்வளவு தான்.