பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

96


 நோய் வந்தபிறகு, டாக்டர்கள் எச்சரித்த பிறகு, பத்தியத்தை கடைபிடிக்கும் பண்பு வருகிறதல்லவா!

நீங்கள் எச்சரிக்கையாக முன்கூட்டியே இருந்து விட்டால், டாக்டர்கள் சொல்வதற்கு முன்னதாகவே பத்திய முறைகளைப் பின்பற்றி வந்து விட்டால், உடல் பத்திரமாக இருக்கும். சித்திரமாக சிரிக்கும். இல்லையென்றால், உங்கள் உடல் நோய்களின் சத்திரம் போல்தான் இருக்கும்.

ஆகவே, உடல் எடை கூடிப்போகாமல் உணவு உண்ணுங்கள். உணவின் அளவு கொஞ்சமாக இருந்தால், சத்துள்ள சரிவிகித உணவு முறையைப் பின்பற்றுங்கள்.

இருக்கும் காலம் வரை இன்பமாக வாழ வேண்டும் என்ற இலட்சிய நினைவினை எண்ணத்தில் வையுங்கள். நடப்பது எல்லாம் நன்மைகளாகவே முடியும்.