பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காலத்தை வென்ற கவிவாணர்’ முனைவர் அமுதன் ஓர் இருபது ஆண்டுக் காலம் (1950 - 1970) தமிழகத்துத் திரைவானில் ஒரு மின்னல் தொடர்ந்து மின்னிக் கொண்டிருந்தது! எப்படி மின்னுவது என்று, மின்னல்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்த மின்னல் அது அது மின்னத் தொடங்கிய காலந் தொடங்கி, திரைவானில் அப்பொழுது மின்னிக் கொண்டிருந்தவையெல்லாம் மின்மினியாய் வெளிச்சமற்றுப் போயின. கவிமழை கொட்டிய அம்மின்னலுக்கு 'உடுமலை நாராயண கவி' என்பது பெயர். திரைத் தாரகைகள் பல, அம்மின்னல் தந்த வெளிச்சத்தில் மினுமினுப்பு அடைந்ததும் உண்மை, கண்ட இடமெல்லாம் கவியரசர் என்ற பொருளில், 'கவிராயர், கவிராயர்' என்று அம் மின்னலைக் கைதொழுது ஏத்தி நின்றதும் உண்மை! நாடகம் ஈன்றெடுத்த நனிநாகரிகக் குழந்தை திரைப்படம். அந்தப் புதுமையின் மீது, இந்தப் பழமை மோதி வென்றது! அந்தச் சாதனை இமயமென நின்றது; தமிழர் இதயமெல்லாம் வென்றது இவரால் திரையுலகில் சென்றதும், நின்றதும் பல்; அவற்றுட் சில: இசைத் தமிழ் நின்றது; தமிழர்க்கு இசையாத கலப்புத் தமிழ் சென்றது; 'ஸ்வாமி' சென்றார், 'தலைவர்' நின்றார். "ப்ரேமை சென்றது; "காதல்' நின்றது. 'அநுராகம் சென்றது, 'அன்பு நின்றது!