பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை விட்டு எங்கே போனே மாமா? பெண் ; ஏழெட்டு நாளாகத் தானே மாமா - நீ என்னைவிட்டு எங்கே போனே வாமாமா! ஆண் போகாத ஊருக்கெல்லாம் போனேண்டி - எம் பொண்டாட்டியொனை நெனைச்சே வந்தேண்டி! பெண் என்னென்ன வாங்கிவந்தே யேமாமா - என்னை ஏமாத்தாமே எங்கெஇப்படி தாமாமா! ஆண் காணாத துணிமணியும் கண்டேண்டி காசில்லாமத்தா வாங்காமெ நா வந்தேண்டி! தங்கிட்டிப் புங்கிட்டித் தாந்திமிக்கிட்டி தங்கிட்டிப் புங்கிட்டித் தை! ങ്ങളു தாந்திமிக்கிட்டி தங்கிட்டிப் புங்கிட்டி தங்கிட்டிப் புங்கிட்டித் தை அங்கே சுத்தி இங்கே சுத்தி ஐயா புத்தி சரியில்லே! அதனாலே இங்கேவொரு அம்மா புத்தி சரியில்லே! அம்மா சும்மா ஜயாவைத்தாம் பார்க்கிற பார்வையும் ஐயோ இப்பச் சரியில்லே! தங்கிட்டிப் புங்கிட்டித் தாந்திமிக்கிட்டி தங்கிட்டிப் புங்கிட்டித் தை! ങ്ങഇ தாந்திமிக்கிட்டி தங்கிட்டிப்புங்கிட்டி தங்கிட்டிப் புங்கிட்டித்தை! ராசாவுக்காகவே ரோசாப்பூக் கொண்டு வந்தோம் நேசமாகத் தருவோமின்னா நேரங்காலம் சரியில்லே! மன்னவனைத் தேடி மல்லிகைப்பூக் கொண்டு வந்தோம் மாலையிட்டுப் பார்ப்போமின்னா மார்க்கமொண்ணுந் தெரியல்லே! 79