பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரனுக்காகவே தோகைமயில் கொண்டு வந்தோம் சொந்தமாகத் தருவோமிண்ணா வந்தவேளை சரியில்லை! முடியாது என்றே எதையும் முயற்சி பண்ணிப் பார்க்காமல் முன்வைத்த காலை நாமே பின்வைப்பது முறையில்லே! ஆத்துக்குள்ளே ஒசந்ததெது? - காவேரி ஒசந்ததெது காவேரி - கரை அழகினிலே சிறந்ததெது? - காவேரி! சிறந்ததெது? காவேரி சோத்துப் பஞ்சம் தீர்ப்பதெது? - காவேரி பஞ்சம் தீர்ப்பதெது? - காவேரி சோழ வளம் தருவதெது? - காவேரி! வளம் தருவதெது? - காவேரி காவேரி நல்ல காவேரி இன்பக் காவேரி! நம்ம காவேரி, - காவேரி எப்படிச் செஞ்சே கடவுளே? மேலிருந்து பாக்கையிலே மினுமினுப்புத் தட்டுதப்பா கீழிறங்கிப் பாப்பமின்னா கிடுகிடுன்னு நடுங்குதப்பா மானிருக்குது கீழே: நானிருக்கேன் மேலே: மனசு நடுவே மாட்டிக்கிட்டு அலையுதே தன்னாலே!! மீனிருக்கணும் குளத்திலே - அது மேலே வந்தது என்னத்துலே? மேயுதப்பா அதோ அந்த வெளுத்த நிலா முகத்திலே தேனெ வடிச்சுப் பழத்திலே சேத்து அமைச்ச விதத்திலே கண்ணும்போது இனிக்கும் உடம்பெ எப்படிச் செஞ்சே கடவுளே! 義)