பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையோடு பணி செய்! பெண் சங்கீதத்தொடு வேலை செஞ்சாச் சலிப்பும் இராது - நல்ல சாப்பாடு முதல் துணிமணிக்குந் சங்கடம் வராது (சங்கீ) ஆண் பொண்டாட்டி யுன்னைப்போலே கெடைச்சாத் திண்டாட்டம் இருக்காது - நல்ல பெண் பூலோகந்தனில் உங்களைப் போலே புருஷன் யார்க்கும் வாய்ச்சிடாது - நீ எறப்புக்கூடை யெடுத்துவீச இடுப்பை வளைக்கும் தினுசு - அதை எதுக்க திண்ணு பார்க்கும் போது எங்கோ போகுது மனசு- நீங்க சுயத்தைப் புடிச்சு இழுக்கும் போது கன்னம் செவந்து ஜொலிக்குது - அதைக் காணும் போது என்னையும் சேர்த்துக் காந்தம் போல இழுக்குது. (சங்கீ) கட்டிய வீட்டைக் காக்கப் பார்! மனஸ்தாபம் குடும்பச் சண்டை வரக் கூடாது, வரக்கூடாது; ஆமாம் வாழ்நாளை வீணாக்கக் கூடாது - சண்டை வரக்கூடாது; இஷ்டப்பட்டுக் கட்டும் வீட்டில் இரண்டுபேரும் வசிக்கணும்; கஷ்டம் நஷ்டம் எது வந்தாலும் கட்டிய வீட்டைக் காக்கனும், ஒண்ணாகச் சேர்ந்து என்றும் வாழ்வோமே! (சின்ன) - மருமகள் 86