பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைக் கணக்கை நிறுத்தி ஆகணும்! ஆண் ஒழைச்சுத் திங்க நமக்குப் பலமிருக்குதே! உண்மையோடு உதவிக்காக நீயு மிருக்கிறே! அட, சாமி பெண் அளவில்லாத குழந்தைச் செல்வம் கொடுத்து மிருக்குதே - நாம ஆண் தளர்ந்தபோது பாதுகாக்கும் எதுக்கு முழிக்கிறே? மனசை வுட்டு வுடாதே மாமன் மகளே! - பின்னே வாடியம்மா போவோம் ஏண்டி ரகளே? - கண்ணே! மனசை விட்டுடாதே மாமன் மகளே! பெண் நம்மைப் போலே பிள்ளை குட்டி தாயா அலையோனுமா? தானும்நீயும் போனா நாதியேதும் உண்டுமா? உன்னைப் போலப் படிக்காத முட்டாள இருக்கோணுமா? - யோசிக்காட்டிப் பின்னாலே மோசமாகுமே மாமா வருஷ மொரு பிரசவம் தவறுவ தில்லை - நானும் வத்தலாகப் போயிட்டேன் சக்தியு மில்லே! - மச்சான் அவசரப் படாதே அத்தை மவனே! ஆண் நடந்த வரைக்கும் கடவுள் செயல் நடந்து போச்சுது: நாளையோடு குழந்தைக் கணக்கை நிறுத்தி யாச்சுது! - நம்ப குடும்ப நெலமை தெரியும் செலவே கொறச்சு மாச்சுது! - உள்ள குழந்தை குட்டியை வளர்க்கும் வழியும் புரிஞ்சு போச்சுது மனசை வுட்டுடாதே மாமன் மகளே! வந்த வரவே மிச்சம் புடிப்பேன் மாமன் - மகளே! இருவரும் கட்டாயமாய் நம்ம நாளிலே கல்வியாலே பிள்ளை குட்டி மேலோங்கணும் s நல்ல பேரும் அவங்களாலே நாம் வாங்கணும்: - துய உள்ளம் 90