பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெட்ட பெண்மணி! கெட்ட பெண்மணி - புத்தி கெட்ட பெண்மணி கெட்ட பெண்மணி - புத்தி கெட்டபெண்மணி - தன் இஷ்டம் போல அலைந்து வாழ்வை இழப்பவள் எவளோ? - அவளே. - டஜன் இட்லி தின்னு காப்பி குடிச்சு ஏப்பம் போடுவாள் - சட்டி பானை தொட்டுக் கழுவக் கையும் நடுங்குவாள் - வலுச் சண்டை போட்டு சிண்டைப் பிடிக்கும் லண்டியும் எவளோ? - அவளே கணவன் கழுத்தை நெருக்கிப் பிடித்துக் கடனை வாங்குவாள் - காசைக் கண்டபடிக்குத் தண்டச் செலவில் காலி யாக்குவாள்! - மணந்து கொடுத்த மகளை வீட்டில் வைத்துக் கொள்ளுவாள் - நல்ல மட்டு மரியாதை மானம் விட்டவள் எவளோ? - அவளே அதிகப் பேச்சுக் காரி, பெரும் ஆணவக்காரி; அவள் யாருக்கும் அஞ்சா அடங்காப் பிடாரி! சதிக் குண்டான பண்பில்லாத சாகஸக்காரி - தமிழ்த் \ + " و سی و Y * (கெட்ட) (கெட்ட) (கெட்ட) தாயின் குலத்துப்பேரைக் கெடுக்கும் தறுதலை எவளோ? அவளே (கெட்ட) - மங்கையர் திலகம் 93