பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ட்ராமா, சினிமா, சர்க்கஸ் பார்ப்பேன் ராசா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன் வேர்த்துப் புழுங்குனாப் பீச்சுக்குப் போவேன் மீந்த பணத்திலே மீனும் வாங்குவேன் ஆத்தாடி ஒங் கையிலே கொடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்; பெண் அப்புதம்? ஆண் இதுக்கு மேலே சொல்ல மாட்டண்டி - பொம்பளே! இந்த ஊரில் இருக்க மாட்டண்டி இப்போதே போவோணும் ங்ொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி! பெண் மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காஞ்சவன் செய்யிற வேலை கணக்குக்கு மீறிப் பணம் வந்தபோது மனுஷனைச் சும்மா இருக்க விடாது என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்யவே துணிஞ்சு இரவு ராணிகள் வலையிலே விழுந்து ஏமாந்து போவே இன்னுங் கேளு! போலீசுப் புலி புடிக்கும்! - மாப்பிளே! புர்ராவைப் பேத்தெடுக்கும்; போவாதே வீணாகச் சாவாதே - மாமா! பொஞ்சாதி பேச்சைக் கேளு! ஆண் அப்படியா? ஆஹா நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி - நான் ஒண்னுமே அறியாக் கம்மனாட்டி! ஊரு விட்டு ஊரு போனாச் சீரு கெட்டுப் போகு முன்னு உண்மையோடு சொன்ன சொல்லு தன்மையாகத் தோணுது, பட்டனந்தான் போகமாட்டேண்டி - உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி - நல்ல கட்டாணி முத்தே யென் கண்ணெத்தொறந்தவ நீதான் என் பொண்டாட்டி தாயே! 96