பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணால் ஆகாதது இனிமேல் ஏது? விழி வேல்வீச்சிலே கனி வாய்ப்பேச்சிலே - பெண்கள் வீரர்தமை வெல்வார் ஒரே மூச்சிலே நல்ல சீராரும் சதுரங்க சேனையஞ்சவே நின்று போராடும் பலவான்கள் யாரும்கொஞ்சவே வந்து நேரில் தஞ்சமே என்று பாரில் கெஞ்சவே பெண்கள் பணியாளராய்ச் சொல்லைக்கேளாரோ? - (விழி) படை காட்டுவார் தமக்கு இடை காட்டினால் - பய பக்தியோடு பட்சந் தன்னைக் காட் டாரோ - முத்துப் பல்காட்டினால் படித்துச் சொல் காட்டும் நாவலரும் பாட்டுப் பாடிப் பல்லைப் பல்லைக் காட்டாரோ - பெண்கள் பணியாளராய்ச் சொல்லைக் கேளாரோ? (விழி) பெண்குலத்தைப் பேய்களென்ற பித்தர் தம்மையே - பெண்டு பிள்ளைகுட்டி உள்ளவராய் மாற்றி விடுவோம் - இந்த மண்டலத்தில் காண்பதெல்லாம் சக்தி மயமே - என்ற மாண்புதனை நாங்கள் பறை சாற்றி வருவோம் பெண்ணால் ஆகாததும் இனிமேலேது? (விழி) - தங்கப்பதுமை 101