பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் பாடலில் எது உயர்ந்தது? இசை உயர்ந்ததா? எதுகை உயர்ந்ததா? மோனை உயர்ந்ததா? கருத்து உயர்ந்ததா? - எல்லாம் உயர்ந்தவை அதனால், கவிஞர் பெருமான் இவையனைத்தின் மேலும் "சிம்மாதனம்' இட்டு வீற்றிருக்கிறார் அவர் கீதங்கள் - இத்திருநாட்டின் மேல் அவர் கொண்டிருந்த அன்பின் நீளங்கள் தனக்காக விடும் கண்ணீர், தன் உடலைத் துயதாக்கும்; பிறர்க்காக விடும் கண்ணிர் பேருலகைத் துயதாக்கும் என்பார்கள். இதன்படி, உலகைச் சுத்திகரிக்க, உடுமலையார் ஓயாது கண்ணீர் விட்டவர் ஆகிறார். தமிழ், தமிழ்நாடு, தமிழர் சமுதாயம் இந்த மூன்றின் முன்னேற்றத்திற்கும் ஓயாது பள்ளுப் பாடி ஆடிய 'முக்கூடற்பள்ளு' தான் அவர் கவிதைகள். 1950 முதல் 1972 வரை, அவர் இசைத்த பாடல்களின் இசைத் தமிழ்ப் பிரவாகம் மாட மாளிகைக்குள்ளும் அமுதத் தெறிப்பாய்த் துளித்தது! ஏழ்மைக் குடிலுக்குள்ளும் நுழைந்து, தேனாய் நனைத்தது!! இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் மீது, கவிஞர்க்கு வெளிச்சொல்ல முடியாத ஒரு பற்று, பாசம், காதல் - வெகுநாட்களாய் உள்ளேயே ஊற்றெடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. வாய்ப்புக் கனிந்தவுடன், அவை இசைத்தமிழ் வடிவில் எழுந்து பாய்ந்திருக்கிறது. தன் சொந்தத் திறனால், திரையுலகின் கால் நூற்றாண்டுக் காலத்தைச் சுருட்டித் தன் கக்கத்தில் வைத்திருந்தார் கவிஞர் பெருமான் ஒரு நூற்றாண்டில் பிறப்பெடுத்த கவிஞர்கள் பல நூற்றாண்டுகளை வென்று விடுகிறார்கள் என்பார்கள் உடுமலையாரும் பல நூற்றாண்டுகளை வென்று விட்டார்!! இனிப்பில்லாத கற்கண்டு எங்கும் கிடைக்காதது போல, கருத்து வளம் இல்லாத ஒலிச்சேர்க்கை கவிராயரின் பாடல்களில் காணக் கிடைக்காது. 'கவிதை எல்லா மனிதர்களுக்காகவும் படைக்கப்படுகிறது. ஆனால், எல்லா மனிதர்களாலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை' என்ற ஏக்கம் கவிஞர்களுக்கு என்றுமே உண்டு. உடுமலையாரின் கவிதைகள் எல்லா மனிதர்களாலும் புரிந்து கொள்ளப்படுவதற்காகவே உருவெடுத்தவை. அவர் கவிதை புரியவில்லை 盘