பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவதும் பெண்ணாலே வாழ்விலே சுகம் மருவு சீரெலாம் வளர்வது பெண்ணாலே - மனித தாழ்விலாத இகதர்மம் சிறந்ததும் சற்குணி தன்னாலே ஆவதும் பெண்ணாலே - எதும் அழிவதும் பெண்ணாலே ஆவல் மேவிய தேவை யானவையும் அன்பு கொண்ட பெண்ணாலே வீசி விட்டா வெளஞ்ச நெல்லில் ராசி குவியுமே - பாளை தூசி பிரியுமே வேலை செய்தா எல்லோருக்கும் விசனங் குறையுமே மேதினிமேல் மேன்மையெல்லாம் பெண்களாலே காதலெனும் ஜோதி இன்பக் கனிகளாலே. அணுப்போலே புகைபோலே - பஞ்சு ஆகணும் மேகம்போலே - பஞ்சு அணைக்கும் இருகையாலே அடிப்போம் வில்லதனாலே அரிவையர் நம்செயலாலே - பஞ்சு நாட்டின் பெருமை நங்கையராலே நலமோங்கும் தொழிலாலே செந்தமிழ் ராட்டினத்தாலே மூதாட்டியர் போலே பாட்டினிலே செய்வோம் நூலே - செந்தமிழ்ப் நோயற்ற வாழ்வே - ஆம் குறைவற்ற செல்வம் - என்று காயம் நன்மைகாணும் தர்ம பரிகாரம் செய்குவோம் 103 (அணு) (அணு) (நாட்) (பாட்) (நோ)