பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவர்க்கும் கற்புப் பொது என்னுடம்பில் நான் பாதி மனைவி பாதி என்று சொல்லும் ஆடவர்கள் மறுவினாடி தன்மையில்லாக் கோவலன்கள் ஆகின்றார் என்னநீதி? இன்ப உணர்வே உயிரின் இயற்கை இதையும் மறத்தார் ஆடவர்கள் பொன்னைப்போல் மனைவி இருக்கையில் பொது மகள் துணை நாடுகிறார். (பொண்) பெண்களிடம் கற்பை எதிர் பார்க்கும் ஆண்களே! பெண்களுக்கும் ஆண்களுக்கும் கற்புப் பொதுவன்றோ? கொண்ட மனைவியர் தெருவில் சென்றால் கோபம் கொண்டிடும் ஆண்கள் யாரும் கண்ட பெண்கள் அன்னை என்றே கருதி வாழ்வது கடமையன்றோ? ஒரு பெண்ணை ஐந்து பேர் நாடுவதும் கு பாவி அறுபதாயிரம் பெண்களின்

உரிமை பறிப்பதும் சரிதானோ? பெண்ணினத்தைத் தாழ்த்தும் சதியன்றோ? இருளில் உள்ளது பாழும் உலகம், மகளிர் வேதனை என்று விலகும்? பருவ மாதரின் உரிமை காத்திட, அரிய சேவை புரிய வேண்டும்! (பெண்) பெண் உலகம்! பெண்களே, உலகப் பெண்களே! பிழைகள் செய்பவர் ஆண்களன்றோ? அழிவை படைபவர் நீங்களன்றோ? அன்பு மனைவியர் தனித்து வருந்திட அருமை நாயகர் பிரியலாமோ? அன்றிற் பறவையும் பெட்டையைப் பிரித்தால் அரை நொடியிலே உயிர் விடுமே! (பெண்) 406