பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவதும் அழிவதும் பெண்ணால்: ஊஹலம் ஐயையோ ஊஹாம்னா இல்லையென்றும் ஊம்னா கோபமென்றும் ஊன்னா சரியென்றும் உலகத்திலே சொல்லுறாங்க ஊன்னு சொல்லி விட்டா உயர்வேது பெண்ணுக்கே? ஊஹலம்னு சொல்லுவதே... உரிமையதாம் ஊ அது பொல்லாது உளறலேயல்லாது உறுதியாய் நிலைத்து நில்லாது (ஊன்னு) மதுவும் மயக்கமும் போலே மாங்காயும் புளிப்பும் போலே மங்கையே நீயும்நானும் மாநிலந்தன்னில் வாழ (ஊன்னு) எட்டாத பழத்தின் மீது வெட்டியிலே ஆசையேன்? கிட்டாதெனத் தெரிந்தும் கொட்டாவி ஏன்? அன்றொரு பெண்ணுக்காய் ஆண்டியும் ஆனாயே! ஆவதும் அழிவதும் பெண்ணாலே - புரிஞ்சுதா? (ஊன்னு) ஆவதும் பெண்ணாலே! வாழ்விலே சுகம் மருவு சீரெலாம் வளர்வது பெண்ணாலே - மனித (៤៨) தாழ்விலாத இகதர்மம் சிறந்ததும் சற்குணி தன்னாலே (வா) ஆவதும் பெண்ணாலே - ஏதும் அழிவதும் பெண்ணாலே - மிக ஆவல் மேவிய தேவையாவையும் அன்பு கொண்ட பெண்ணாலே (வா) - வேலைக்காரி 107