பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கார ரேகை கையில் காணுது அழகர்மலையானை, ஆனைமுகத்தானை, கழுகுமலையானை, கதிர்காமவேலவனைத் தொழுது குறிபார்த்துச் சொல்லுவதும் மாறாதே! ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடியே. சிங்கார ரேகை கையில் காணுது - உன் (சிங்கார) உண்மை தோணுது - சொல்ல இங்கே கொஞ்சம் பயமாகுது. (சிங்) அடெ... சும்மா சொல்லு பயப்படாதே! மங்கை நல்லாள் கொண்ட நோயது என்னது? மாப்பிள்ளை நினைவாகும் மனநோயுமானது தீப்போலே காயாமல் காயுது காயுதா? காயுது!.... சாப்பாடும் தண்ணீரும் உண்ணாமல் தவிக்குது பூப்போல பொன்மேனி வாடுது வாடுதா? வாடுது.....! - மதுரைவீரன் கீதானந்தம் கீதானந்தம் பேரின்பம் - சங்கீதானந்தம் பேரின்பம் சுருதி சேரும் குரல் மகர யாழும் கூடும் வேதானந்தம் ஆரம்பம் - சாமவேதானந்தம் ஆரம்பம் மேவும் ராகம் சரிகமபதநிச சநிதபமகரிச (கீதா) 115