பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கையில் எழுவது நாதம் இயற்கையாய் அமைவது நாதம் ...ஏ ழிசைகளால் இணங்க இசைப்பது சங்கீதம். பயிற்சியால் பலர்க்கும் பலிக்காது - முயற்சி பண்ணாமலே சிலர்க்குத் தன்னால் வரும் தப்பாது (இயற்) பாடலுக்குத் தோழமை சேர் மிருதங்கம் - முறை பழுதுபடாமல் செய்யும் அதனங்கம் - எங்கள் காடுதந்த தாவரத்தின் செல்வமல்லவா? - உங்கள் நாடுதந்த பொருள் அல்லவென்று - இந் நாடு சொல்லும் அதைச் சொல்லவா? (இயற்) மேடு பள்ளமதில் சென்றுலாவி வரும் ஆவினங்கள் மெய்ம் மறந்து - புல் மேய்ந்திடாமல் நீர் வேண்டிடாது - செவி யருந்தும் அமுதென விருந்து தரும் வேணு காணமென மாயனான கோ பாலனுதிய வேய்ங்குழல் - தினம் விளைந்ததும் வளர்ந்ததும் உங்கள் நாட்டிலா? எங்கள் காட்டிலா? சொல்லு (இயற்) நட்டுவனார் ஆடலுக்குத் தட்டு கழியும் நாதசுர ஒத்துமுதல் யாழினங்களும் கொட்டு முழக்கோடு சிவன் கொண்ட உடுக்கை கூறுநதி கேரளத்துத் தக்கை இடக்கை குமுறுகின்ற இடி ஒலி தருந்தவிலும் உருமி ஜண்டை சிறு பறை உருவடைந்ததுதிரு நாட்டிலா? இல்லை காட்டிலா? சொல்லு (இயற்) 117