பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரி செந்திரு மாதுங் கலைமாதுஞ் - சிவ காமி யென் றோதும் மலைமாதும், சொந்தமுடன் நவ ராத்திரி நாளன்று தோன்றிடுவார் - ஒன்று - சேர்ந்திடுவார் சந்தத் தமிழ்க்கவி தான் பாடி - அவர் தாள் பணிந்தே யாமுங் கொண்டாடி சந்ததமும் இன்பச் செல்வமுங் கல்வியும் தாங்கிடலாம் - புகழ் - ஓங்கிடலாம் சித்திரம் சிற்பங்கள் கைத்தொழில் வர்த்தகம் செய்திடும் சாதனங்கள் படைகள் பத்தகங்கள் எழுத்தாணிகளும் வைத்துப் போற்றிடலாம் - இன்பம் - ஏற்றிடலாம்! பத்தினித் தெய்வங்கள் பொம்மைக் கொலுவைத்துப் பாடிடலாம் - நன்மை - தேடிடலாம்! புத்தம் புதுமலர் தித்திக்கும் பண்டங்கள் பொங்கல் எல்லாம் வைத்துப் பூசிக்கலாம் கண்ணென்று சொல்கின்ற எண்ணும் எழுத்தையும் கற்பித்த சற்குரு நாதனுக்கே - நல்ல சான்ன புஷ்பம் புதுச் சோமனெல்லாம் தந்து துதித்திடலாம் - நன்கு - மதித்திடலாம். .ெ சொல்லிக் கொடுத்த குரு வாழி! சொந்தம் வாழி சுகம் வாழி! நல்லோர் வாழி! நலம் வாழி! நாடு வளம் பெறுந் தொழில் வாழி! இல்லறம் வாழி எழில் வாழி! ஈன்றோர் வாழி!! வாழியவே!!! (செந்திரு) 1.18