பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலில் ஆடிய காதல் ஆட்டம் மானினக் கூட்டம் வருவது போல் - பெரும் மதகரிக் கும்பல் வருவது போல்: தேன்படு சொல்லியர் முன்னாலே - வரத் திரண்டனர் ஆண்களும் பின்னாலே! ஆடல் அணங்கு மாதவியும் - நல்ல ஆணில் அழகன் கோவலனும்: அணியும் பணிவுடை அலங்காரத்தொடு அன்பாய்க் கலந்தார் விரைவினிலே நடனம் ஆடினார் லயங்கொண்டு, - இரு நயனம் மூடினார் கரங்கொண்டு! கடலில் ஆடினார் கலங்கொண்டு - உயர் காதலாடினார் மயல் கொண்டு! நீரைச் சாடினார் குழல் கொண்டு - பலர் நிலவில் ஆடினார் எழில் கண்டு: துரி ஆடினார் விசை கொண்டு - சிலர் சொந்தம் ஆடினார் துணை கொண்டு! கேலியாடினார் முறை கொண்டு - இரு கிளிகள் பாடினார் தமிழ் கொண்டு!! கோழிபிடிப்பவன் கொங்காவி நங்குடிவாழ் குமராண்டியவெ கும்பிட்டவெம் பின்னாலெல்லாந் திரிவாண்டியவெ: கூத்தாடி பெற்றெடுத்த குழந்தையாண்டியவெ, குறத்தியைச் சேர்த்துக்கிட்டு கொஞ்சுவாண்டி! கோத்திரமுங் குலமுங்கெட்ட கோவனாண்டியவெ, கூவுகிற கோழியத்தாம் பிடிப்பாண்டி - திரு. (கொங்காவி) 123