பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூம்புகாரில் இந்திரவிழா பொன்னியாறு குணகடலோடு தினம் புணர்ந்தே உறவாடும் - அந்தப் sk புறத்தில் அமைந்தது பூம்புகார் நகரம் புலவோர் புகழ்சூடும் கன்னலோடு வளர் கமுகும் தென்னையும் கலியும் கனிமாவும் - நல்ல செந்நெற்கழனிகள் செழிக்கும் மருங்கில் தேன்படு பூங்காவும் சோறுடைத்துச் சோனாடென்பார்கள் அதிலே தலைநகரம் சொல்ல வேண்டுமெனில் மற்றுள எதற்கும் இதுவேதான் சிகரம் - இங்கு இந்திரன் பெயரால் பண்டிகை அமைத்தார் எழிலுக்கெழில் கொடுத்தார் சந்தோஷம் தன்னை வரவழைத்தார் - அதைச் சகலரும் அனுபவித்தார். மானினக் கூட்டம் வருவதுபோல் - பெரும் மதகரிக்கும்பல் வருவது போல் தேன்படும் சொல்லியர் முன்னாலே - வரத் திரண்டனர் ஆண்களும் பின்னாலே. ஆடல் அணங்கு மாதவியும் - நல்ல ஆணில் அழகன் கோவலனும் அணியும் பணிவுடை அலங்காரத்தொடு அன்பாய்க் கலந்தான் விழாவிலே. நடனம் ஆடினார் லயம் கொண்டு - இரு நயனம் மூடினார் இருகரம் கொண்டு கடலில் ஆடினார் கலங் கொண்டு - உயர் காதல் ஆடினார் மயல் கொண்டு நீரைச் சாடினார் சுழல் கொண்டு - பலர் நிலவிலாடினார் எழில் கொண்டு துரியாடினார் விசை கொண்டு - சிலர் சொந்தம் தேடினார் துணை கொண்டு! கேலியாடினார் முறை கொண்டு - இன்பக் கிளிகள் பேசினார் தமிழ் கொண்டு - மன் மாலைப் பாடினார் கவிகொண்டு - சோழ மண்ணைப் பாடினார் வளம் கண்டு! 124