பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய கானல் வரி - இன்றைய இசைப் பாட்டில்! கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணிர்! திங்களோ காணிர், திமில்வாழ்தர் சீறுர்க்கே அங்கனேர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே! - சிலப்பதிகாரம், கானல்வரி குஞ்சுப்பிறையில் செஞ்சிலைகள் மீன்கள் கொண்டலும் சேர்த்தெழுதி, வஞ்சமதன் செயல் வர்ணமிட்ட முகம் வட்டநிலாப் பிம்பமோ? வட்டதிலாப் பிம்பம் வாரிதிமீன் புல்லர் வாழு மிவ்வூர் தனிலே, வானிடையே பாம்பு வாய் கொள்ளுமோ - என்றஞ்சி வந்ததுவோ என்னவோ! கைதைவேலி கடிவாய் வந்தெம் பொய்தல் அழித்துப் போனான் ஒருவன், பொய்தல் அழித்துப் போனார் அவர்தம் மையல் மனம் விட்ட கல்வாரல்லர்! - கானல் வரி ஆழிக்கரை தனிலே - தாழை வேலிக்கருகினிலே - ஒரு காளைப் பருவங் கொண்டான் கண்ணாலேதோ மொழிந்தார், கண்ணாலேதோ மொழிந்தார், காணாமலே மறைந்தார்; காணாது மறைந்தாலும் என் கருத்தினிலே நிறைந்தார்: 126