பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னை எனும் அன்னை தொகையறா தாளாலே உண்ட நீரைத் தலையாலே தருவதடா தென்னை - அது தாராள இயல்போடு தலைநிமிர்ந்து பார்க்குதடா விண்ணை பல்லவி ஓங்கி வளர்ந்தது பாங்கில் உயர்ந்தது தென்னை உருவத்திலே மரம் காணும் உதவியிலே நமக்கன்னை! தீங்கில்லாத இந்தச் செல்வத்திற்காகவே தெய்வம் படைத்தது என்னை - இயற்கைத் தெய்வம் படைத்து என்னை - நம்ம தேசத்திலே இதன் செழிப்பினாலே நித்தம் சிறப்புற்றதே பல பண்ணை மேலைச் சுடும் வெயில் காலத்திலே தங்கும் சோலைக்கும் ஆனதடா - மண்ணில் ஏழைக் குடிசையின் கூரைக்கு மேல் வைக்கும் ஒலைக்கும் ஏற்றதடா வாறு கோலுக்கும் ஈர்க்கைப் பாலிக்கும் நாலா வேலைக்கு உகந்ததடா - சுப காலத்திலே பந்தல் கோலத்துக்கும் இதன் பாளை சிறந்ததடா - முத்துப் பாளை சிறந்ததடா! அவியலுக்கும் துவையலுக்கும் ஆகாரம் பலவகைக்கும் அழகான காய் தருமே - இதை ஆட்டினால் எண்ணெய் தரும் அகப்பைக்குத் தொட்டி தரும்பு அடுப்பெரிக்க மட்டை தருமே!!! 132