பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியாடை கட்டும் ஜீவன் முக்தர் கைக்கு ஒடும் கொடுக்குதடா - திரு ஒடும் கொடுக்குதடா!! - (தேங்காயும்) பக்திமான் கடவுள்தன்னை வேண்டும் காரியத்துக் காகுதடா! - உயர் காவியப் பாவலர் நாவலர் கற்பனை ஒவிய ரூபமடா - கோடைக் கற்பகம் நானென்று செப்பிடும் வாய்க்குச் சர்க்கரை கொட்டுங்கடா - சீனிச் சர்க்கரை கொட்டுங்கடா!! ခွံ့ { எல்லாம் இன்பமயம்: பல்லவி எல்லாம் இன்ப மயம் - புவிமேல் இயற்கையினாலே இயங்கும் எழில்வளம் (எல்லாம்; அதுபல்லவி அல்லா தனவும் ஆவனவும் தெரிந்த நல்லோர் மனதினில் நாடும் அன்பானவோர் வினை முடிவு (எல்லாம்) சரணம் மலையில் அருவியிலே வளர் மழலை மொழிதனிலே மலரின் மணந்தனிலே வயலின் பயிர்தனில் மனையாள் பணிதனிலே... (எல்லாம்) நிலவின் ஒளியாலும், குழலின் இசையாலும் நீலக் கடல் வீசும் அலையாலுமே... (எல்லாம்) கலைஞன் சிலையிலும் கவிதைப் பொருளிலும், கானமாம் மயிலின் ஆடலுறு சுவையில் காதலொடு மனிதன் புலன் காண்பது (எல்லாம்) - மணமகள் 133