பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 பாடுபடும் தோழர்

உழுது புலன் காப்போம் ஏர் (உழுது - ஆநிரை உதவி யென்றே மேய்ப்போம்; வான் மழை கண்டு வளம் பொங்கும் உலகெங்கும் நலன் கொள்ளப் பழுதின்றித் தொழில் பார்ப்போம் - உழவர் நாம் பசி யென்ற பிணி தீர்ப்போம்!

களை யிருந்தாப் பயிர் வளராது, அதை யெடுத்துப் பிடணும். கடனிருந்தாக் கவலை தீராது; அதையும் கொடுத்துப் பிடணும்! மழை கொறஞ்சா விளைவுயராது; - நம்ம நாட்டில் ஜாதி மதமிருந்தாப் பகைமை மாறாது; எதையும் சுத்தப் படுத்தணும்!

உலகத்திலே உன்னதமாய் உயர்ந்த நாகரீகம்! - மிக உத்தமராம் தொழிலாளர் உழைப்பில் வந்ததாகும்!

நிலவு சுடர் நெருப்புத் தேவர் பலரும் வேலைக்காரர் - பயிர் பண்ணும் நேர்மையாளர் - தலை நித்தம் பாடு பட்ட தோழர்! (உழுது)

                      - வேலைக்காரி


            வாழ்க்கையெனும் ஊஞ்சல்!

இல்லறமும் துறவறமும் துண்களாக இகபரத்தின் பொதுநிலையே விட்டமாக நல்லறங்கள் நாலுமே வடங்களாக நழுவாத சத்தியமே பலகையாக ஆடுவோமே ஊஞ்சல் ஆடுவோமே அலங்காரமாக ஊஞ்சல் ஆடுவோமே!


                          137