பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிராயரின் கவிதைப் பொய்கையில் மூழ்கி முக்குளித்துத் தேடினால், தமிழர் வாழ்வின் பெருமிதம் கிடைக்கும்; சங்கத் தமிழின் சாவி கிடைக்கும்; கண்ணகியின் கற்புப் பேழை கிடைக்கும் புறநானூற்றுப் புதையலும் கிடைக்கும்!! முயற்சியைப் பொருத்து முத்துக்கள் கிடைக்கும்!! கவிராயர், பெரியாரின் எக்காளம்! அண்ணாவின் அணிநடைச் செலவு கலைஞரின் வீறாப்பு: லேனாவின் மேனாம்பு! கலைவாணரின் பாட்டு வில்! திரைக் கலைஞர் பலர் தோள் ஏந்திச் சுமந்த துய்ய கவிப் பல்லக்கு: அவர்தம், கம்பீரம் குறையாத கவிதை வாழ்வு பற்றி எத்தனை சொன்னாலும் மிச்சமிருக்கும் வீறார்ந்த திறன் அவர் திறன்! நாம் எல்லாம் காலத்தில் நின்றிருக்கிறோம்! உடுமலையார் காலத்தை வென்று நிற்கிறார்!