பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒயாச் சண்டை தீராத் தொல்லை! அந்தக்காலம் போலே உண்டோ? அண்ணே நீசொல்லு - நினைத்தே அண்ணே நீசொல்லு தம்பி TETTGor தலைகால் தெரியாமே தத்தித்தோம்என ஆடுறான்பாரு (அந்தக்காலம்) தருமன் இருந்த காலம் தனிலே தபால் தந்தி உண்டா? ஒய் ஒய்! தபால் தந்தி உண்டா? தண்டவாளமும், கிடையாதப்போ தமுக்குப் போட்ட காலம் - அது தமுக்குப் போட்ட காலம்! நாப்பதுக் குள்ளே அறுபது ஆகும் நாசகாலம் இதுடா - தம்பி நாசகாலம் இதுடா! சொல்லைக் காக்கச் சுடலை காத்த சுத்த வீரன் ஏது? - இப்போ சுத்த வீரன் ஏது? பட்டன் அமுக்கினாப் பளிச்சுனு எரியும் பல்புவிளக்கு ஏது? - அப்போ பல்புவிளக்கு ஏது? பகல்போல் இரவைப் பண்ணிப்போடற பாஷன் அப்போ ஏது? பாஷன் அப்போ ஏது? ரேஷன் உண்டா? கூப்பன் உண்டா? இரட்டை நாக்குஉண்டா? - அப்போ இரட்டை நாக்குஉண்டா? ஒயாச்சண்டெ தீராத் தொல்லை - கொண்ட காலம் இதுடா - தம்பி கொண்டகாலம் இதுடா 140