பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகராதி விட்டே எடுக்கணும்: பல்லவி மழையை நம்பி உயிர் வாழும் மானம் பாத்த சீமையிலே உழவும் தொழிலும் நன்றாய் ஓங்கவேணும் உடைப் பஞ்சம் உணவுப் பஞ்சம் நீங்கவேணும் (மழையை) அநுபல்லவி பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகையாலே - என்ற வல்லவன் சொல்லால் வந்த முறையாலே விளையும் பொருளை எல்லாம் விஞ்ஞான முறையிலே விருத்தி செய்ய வேண்டும் மக்கள் இனிமேலே - இதை விவரமாக கேட்டுக்கோணும் தில்லாலே! (மழையை) சரணம் ஒலைக் குடிசை யெல்லாம் உயர்ந்த மாடி யாகணும் - உப் பிட்ட கூழும் சக்கரை போட்ட பாலாக மாறனும் ஆளையேச்சுத் தின்பா ரெல்லாம் வேலை செஞ்சேயாகணும் - இனி அதிர்ஷ்டம் யோகம் என்ற சொல்லை - அக ராதிவிட்டே எடுக்கணும். (மழையை) 145