பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரம்பை மேனகை ஊர்வசி அங்கே கவனம் வச்சுக்கோ - அண்ணே கவனம் வச்சுக்கோ! நாட்டியமாடி நவரசமாடி நல்ல அமிர்தத்தை நமக்கே ஊட்டி நன்னான நானன்ன பாட்டும் பாடும் அந்தச் சுகத்தைத் தேடி அண்ணே! இங்கே தவசாமே? -- சுகம் இங்கே பாவமாமே? - சரியா? இங்கே பாவமாமே? நெற்றிக் கண்ணைத் திறந்து விட்டா நீறு ஆகும் உலகு எறிஞ்சு சாம்பலாகும் உலகு: - - - - - - - - - - - - (பாடல் நிறைவுறவில்லை) விதியா? வினையா? அறிந்து சொல்வீர்! எளியோர் மனம் படும் பாட்டிலே எழும் ஒசையாம் தாலாட்டிலே ஆண்டவன் ஆகாசமதில் தூங்கு கின்றாரே - தினம் மாந்தரெல்லாம் மாநிலமேல் ஏங்குகின்றாரே - வளர் (நமதாண்டவன்) பார் தனிலே யாரும் பகவான் பெற்ற பேரே - எனில் பகைமையோடு பாகு பாட்டைப் படைத்தவர் யாரே? தாழ்ந்தோ ருயர்ந்தோராக மக்கள் வாழுகின்றாரே! - சிலர் தனவந்தர் பலர் தரித்திரராய்க் காணு கின்றாரே! இதுயார் செயல் விதியா? வினையா? அறிந்து சொல்வீரே! (நமதாண்டவன்) கோடானு கோடி உயிர்க்கொரு தந்தை யென்றாலே - சிலர் கோட்டையில் பலர் குடிசையில் குடியிருப்பதெதனாலே? - கூன் குருடு நொண்டி செவிடர் ஊமை பிறப்பதெதாலே? - நிறை குறைகளுக்கே இதுவரைக்கும் ஒரு முடிவு தெரியலே! இதுயார் செயல் விதியா? வினையா? அறிந்து சொல்வீரே! (நமதாண்டவன்) 147