பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. வார்த்தையில் கடவுளைப் போற்றாதே - மாந்தரைத் துற்றாமல் இருஎனல் நாஸ்திகமா? - இது தோற்றாமல் இருப்பது ஆஸ்திகமா? - இதில் (ஆஸ்திகம்) மொட்டைத்தலைகள் ஒட்டுச்சடைமுடி சிட்டுக் குடுமிகள் ஆஸ்திகமா? - சுருள் வெட்டுத் திருமுடி தொட்டுத் திருகிடும் மீசை விலாசம் நாஸ்திகமா? கட்டிய காவிகள் ஆஸ்திகமா? - அதைக் கவுரவக் குறைவெனல் நாஸ்திகமா? பட்டை நாமங்கள் ஆஸ்திகமா? - அதைப் பகல் வேஷமெனில் நாஸ்திகமா? - இதில் (ஆஸ்தீகம்) போட்டி போட்டுச் சீமாட்டிகள் வைத்திடும் பொம்மைக் கொலுவுகள் ஆஸ்திகமா? - அது வீட்டுவேலைகள் செய்யாதவள் காட்டும் வேடிக்கை யென்பது நாஸ்திகமா? தேட்டுக்காகப் பிள்ளை தேவையென்று - திவ்ய க்ஷேத்திரம் செல்வது ஆஸ்திகமா? - அது பூட்டும் ஆபரணப் புடவை காட்டும் செல்வச் சேட்டை யென்பது நாஸ்திகமா? - இதில் (ஆஸ்தீகம்) சேவல்மச்சம் சர்ப்பக் காவடித் திருக் கொலைக்காட்சிகள் ஆஸ்திகமா? - உயிர் செத்தது பிழைப்பது வாஸ்தவமா? - அது கோவில் திருடர் ஏவும் கூட்டுக் கொள்ளையென்கிறோம் வாஸ்தவமாய் அருள் அல்லவென்பது நாஸ்திகமா? - இதில் (ஆஸ்தீகம்) அரிசி கோதுமை உருமாத்தி ஆப்பம் தோசை சப்பாத்தி அடையும் வடையும் விலாப் புடைக்க அடைக்கும் விரதம் ஆஸ்திகமா? - அது உருசி கண்டதோர் நாவின் - அந்த உணர்ச்சி யென்பதே மேவும் - இதைப் பெருமையாகச் சிலர் விரதமென்பதை முறையிலை யென்பது நாஸ்திகமா? - இதில் (ஆஸ்தீகம்) 154