பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் பிறந்த பூ கனவிலே கண்ட கனியுமானதே நினைவிலே கொண்ட ஆசை - நானே கனகமாமுடிக் காவலன் செல்வி மனைவியா மெனும் காதல் அழிவிலாததும் அழகு வாய்ந்ததும் அறிவிலான கலைஞானம் - மேலாம் வளரவானுயர் புகழும் வேண்டும் நான் மனதிலே கொண்ட ஆசை உடலில் வாழ்வுறும் உயிரை மேவுமென் உடன் பிறந்த ஒரு பூவை - எந்தன் மடமையாளரின் கொடுமையாலந்தோ மயிலை நான் பிரிந்தேனே! ஒதும் வாய்மையாம் நீதிநேர்மையைச் சூதும் வாதும் வெல்வதாமோ பொய்யாம் காதல்தன்னையே காமம் வெல்வதோ கால பேதமோ யாதோ (கனவிலே) (கனவிலே) (அறிவிலான) (கனவிலே) (உடன்பிறந்த) (மயிலை) (சூதும்) (கனவிலே) வெண்பா இலக்கணம் - வெண்பாவில் சீரொருநால், மூன்றுதனிச் சீரொடுநால் மூன்றாகிக் கூறுவிளங் காய்முன்னே நேர்மாமுன் - சேர்நிரைய பண்பார்நாள் காசுமலர் பாமுடி வின்பிறப்பாம் வெண்பாவுக் கான விதி. 161