பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடையனுக்கும் கடைத்தேற்றம் காந்தியண்ணல் கண்டறிந்தார் மடையனுக்கும் அறிவேற்றம் வகுத்துரைத்தார் உடுமலையார்! பெருமைமிகு நம்பெரியார் பேரறிஞர் கலைவாணர் அருங்கலைஞர் அன்பழகர் அனைவருமே இவர்தோழர்! வெண்தாடி வேந்தரது வீறுகொண்ட பேரியக்கம் பண்ணிசையில் ஒளிவீசப் பாடுபட்ட செயல்வீரர் பகுத்தறிவுக் கொள்கைகளைப் படவுலகப் பயிலகத்தில் தகுதியுறக் கற்பித்த தலைசிறந்த பேராசான்! பாடுபொருள் மக்களுக்குப் பளிச்சென்று போய்ச்சேர ஏடெடுத்துக் கவிபுனைந்த ஈரோட்டுப் படைவீட்டார்! இசைக்காக மொழிச்சிதைவு எவர்செய்ய முனைந்தாலும் இசையாது இடைமறித்து எச்சரிக்கும் நக்கீரர்! தென்னாட்டைச் செந்தமிழைத் திரையிசையில் புதுநெறியில் பொன்னெழுத்தால் பொறித்திட்ட பூவிளையூர்ப் பூங்குன்றன்! ஒருகவிமா மணியிவர்க்கே உயர்கலைமா மணிவிருது தருவதனால் வரும்மேன்மை தந்துள்ள விருதுபெறும்! ஒப்பில்லாத் தமிழ்வாழ்க! உடுமலையார் புகழ்வாழ்க!! அப்பழுக்கே இல்லாமல் அவர்வளர்த்த திரைவாழ்க!!!