பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட்டைப்பூச்சியால் மாசம் ஒண்ணுக்கு நூத்துக்கு மேலே மிச்சம்! மூளையாலே, எவ்வளவுமிச்சம் ஆகுது தெரியுமா? கேளு, ஏட்டில் இன்கம் டாக்ஸ்ை யேய்க்கிறவ இடுப்பையொடிச்சாப் பல லச்சம் இறந்தா வரி, இனி இருந்தாவரி - இதில் எத்தனையோ பல லச்சம் நாட்டில் சுபிட்சங்காண மூளையால் நாலா வகையிலும் மிச்சம் - அதுமட்டுமா? மூன்றாம்வகுப்பு ரயில் பிரயாணிகள் மூட்டையைக் காக்கத்தேவை - மூட்டை மூட்டையைக் காக்கத்தேவை! நான்காம்ஜாதி முன்னேற்றங் காண நல்லவர்மூளை தேவை - நாட்டுக்கு நல்லவர்மூளை தேவை. மூட்டைப்பூச்சி ரயிலுக்குந் தேவை! யெம்பொண்டாட்டி மூளையுள்ளவெ செயலுக்குந்தேவை! (முட்டை) போலித் துறவிகள்! படங்கொண்டு பரவுதலை விடங்கொண்ட நாமமுள பாம்பு போலும் பாங்கறுவண் ணான்கழுதை தான்புரண்டு சாம்பல்அணி பண்புபோலும் சடங்குளிரச் சலதிநதித் தண்ணீர்தோய் தருமுதலை, தவளைபோலும் தருக்களடர் வனத்திடை மலைக்குகையுள் வரிப்புலிகள் தனித்தல் போலும் கடன்கொண்டான் கொலையாளி கள்வன்கவர் மெண்டாருக் கஞ்சி நின்றான் காதல்மனை மக்களில்லான் கடும்பாடின்றிக் காசினியை ஏய்க்கும் வீணர் அடவிமலைக் குகைபுகுந்தென்? அலகில்நதி மூழ்கியுமென்? சாம்பல்காவி அணிவதனால் ஆத்மசுத்தி யாவதற்குண் டானவகை யறிகுவாரோ? 163