பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனா விலாசம்: ஆனா விலாசந் தானப்பா - உலகில் பெரியது அதற்கிணை யானது வேறேதப்பா? (ஆனா) மூனாப் பசங்களையும் நானா விதங்களிலும் முன்னேறச் செய்கிறதும், முதலாளி யாக்குறதும், (ஆனா கச்சேரி பண்ணுகிற கலிகால பாகவதர் சிச்சை கற்கும் பெண்மணிகள் ஸ்நேகம் பிடிக்கிறதும் (ஆனா) பக்திவிதங் காணாத பாகவதர் பணத்தை யெல்லாம் அத்தர் செண்டு வியாபாரி அபகரித்து வாழ்கிறதும் (ஆனா) சங்கீதக் குயில்களுக்கும், சதிராடும் மயில்களுக்கும் சர்வண்டுப் பயல்க ளெல்லாம் சபையேறிப் பேசுவதும் (ஆனா) டானா டூனாத் தெரியா ரவுடிப் பசங்க ளெல்லாம் மேனாட்டுக் காரன் போலே வெளிச்சம்போட்டுத் திரியறதும் (ஆனா) சொந்த முயற்சி யில்லான் தொழில் செய்யப் பயிற்சி யில்லான் சந்தர்ப்ப வசத்தினால் தனவந்தன் ஆகிறதும் (ஆனா) - மனமகள் 165