பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தை நோயும் தீருமா? என் சிந்தை நோயுந் தீருமா? தீயன் சூழ்ச்சி மாறுமா? ஸ்நேகம் ஒன்று சேருமா? (என்) தாயில்லா ஏழை நான் தரணிமீது வாழ்வெனோ? சகாயம் தானில்லாது பெருமை தாழ வீனில் மாள்வெனோ? தந்தை அன்பைக் காண்பெனோ? சாந்தி தேடிப் போவேனோ..? (என்) மணம் பெறாத மல்லிகை மாண்பு குறைதல் போலவே மாதும் நானும் சீரிலாப் பேதையாதல் ஞாயமா? மாசிலாத தெய்வமே தேவியே கண் பாரம்மா! (என்) - காவேரி வீரம் செறிந்த முகம் வீரஞ் செறிந்த முகம் சுடர்போலே - அருள் மேவும் இரண்டு விழிமலர் போலே - குண ஈரம் படிந்த மனம் இயல்பாலே - எதும் ஈயும் கரங்கள் மொழி நிரை கோலே! மும் மாவேந்தர் காத்த தமிழ் மரபாளன் - முத்து மாணிக்க மென்ற எழில் பெயராளன் - கற்ற பாவேந்தர் சாற்றும் அவன்புகழ் வாழி - வளர் பார்மீது வாழி மிக நீடூழி வீரஞ் செறிந்த இளஞ்சூரியனைக் காணாமல் சீருலாவும் தாமரைப்பூ மலர்ந்தது பார் இங்கே நேரினில் நான்கண்ட அதிசயமே எந்தன் நெஞ்சறியும் இந்த ரகசியமே. - சொர்க்கவாசல் 166