பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிப்பு: சிரிப்பு...! இதன் சிறப்பைச் சீர்துக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு! - இது களைப்பை நீக்கிக் கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு! - இதைத் துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனிச் செழிப்பு! - பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப் பல் இளிப்பதும் ஒரு வகைச் சிரிப்பு! - இதன் பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது காதறுந்த பழஞ் செருப்பு சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு - வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு இது அடங்கி நடப்பவன் அசட்டுச் சிரிப்பு இது சதிகாரர்களின் சாகசச் சிரிப்பு இது சங்கீதச் சிரிப்பு (சிரிப்பு) - ராஜாராணி 168