பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மா இருக்காது! சும்மா இருக்காதுங்க - அது சும்மா இருக்காதுங்க - எது? சுறுசுறுப்புள்ளவங் கையும் காலும் (சும்மா) என்ன செய்யும்? நோண்டும், தோண்டும், தாண்டும்; எப்படி? பக்கத்திலே உள்ளவனை நோண்டும்; - கடப் பாரை எடுத்துக்கிட்டும் தோண்டும்! தக்க தொரு வாலிபப் பருவத்திலே தைரியமாகவே சுவரெட்டித் தாண்டும் - அது (சும்மா) அம்மா தாயே அப்பா சாமின்னு அன்னங் கின்னங் கேக்காதுங்க - வாயி அன்னங் கின்னங் கேக்காதுங்க! - போடாட்டி ஆண்டவனைத் திட்டாதுங்க! தம், முன்னோர்கள் தேடினதை மூக்கு வரை யேத்திக் கிட்டு மூடனைப் போலிருந்து உடல் வளர்க்காதுங்க! பட்டை நாமஞ் சாத்திக் கிட்டு மத்தியான வெய்யிலிலே கோவிந்தம் கோவிந்த மென்று பாதையில் புரண்டு பிச்சை எடுக்காமல், - அந்தப் பரந்தாமன் பேரை இழுக்காமல் - தினம் கஷ்ட மொடு பாடு பட்டு கஞ்சியும் குடிச்சிக் கிட்டு - காலங் கடத்தாமலே வேலை செய்யும் உடம்பு தன்மானம் விட்டுப் பிட்டுத் 169