பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறு யாரிடம்? எவரிடத்தும் தவறு இல்லை எனக்குத் தான் தொல்லை! இன்னதுதான் செய்வ தென்றும் புரிய வில்லை அம்மா! கரம் பிடித்த கணவன் சொல்லைக் கடந்திடுவேனோ? ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியைக் கைவிடு வேனோ? இருவருக்கும் குறை வராமல் உதவி செய்வேனோ? - இதில் குறைவு வந்தால் நான் உலகில் உய்வேனோ? காதல் தன்னை மறக்கச் சொன்னால் சாதலாகுமே! - அவர் கண்ணியத்தை இழக்கச் சொன்னால் மோதலாகுமே! சாதலின்றி மோதலின்றிச் சங்கடந் தீராதோ? பெரும் சங்கடந் தீராதோ? - பெரும் சந்தோஷந்தான் எங்கள் வாழ்வில் வந்தே சேராதோ? அம்மா.... கானாங் குருவி... கானாங் குருவி காட்டுப் புறா வானம்பாடி வக்காத் தாரா காடெ கவுதாரி மைனா இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா. நய்னா பாட்டுப் பாடும் பறவை கூட வந்திருக்குதுங்க - இதோ நோட்டம் பாத்துப் புடிச்சதுண்ணா வெலையக் கேளுங்க - (காடை) 172 (எவரிட) (எவரிட) (எவரிட) (எவரிட) (எவரிட) - விவசாயி