பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் உரை திரு. நா. இராம கிருட்டிணன் திரு. நா. முத்துசாமி திரு. நா. சுப்பிரமணியம் (பொறியாளர்) (உடுமலையாரின் அன்பு மக்கள்) செந்தமிழின் இசைப்பாகு தீந்தமிழின் கற்கண்டு; நாடறிந்த பாமேடை, நம் தமிழர் இசை ஓடை எனத் தமிழர் நெஞ்சங்களால் பாராட்டப்படும் உடுமலை நாராயணகவி எங்கள் அருமைத் தந்தையார் என்று நாங்கள் உங்கட்கு அறிமுகம் செய்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். அவர் தான தந்தன தான' என்பது போன்ற இசைக்குறியீடு குறிக்கும் ஒரு வரிக்கோடு போடுவார். இசைத் தமிழ் கூத்தாடிக் கொண்டு ஓடிவரும். கருத்துக்கள் முண்டியடித்துக் கொண்டு வந்து கைகோத்துக் கொள்ளும். சந்தங்கள் சரி சரி என்று வந்து வரிசையில் நிற்கும். தாளங்கள் நிறைந்த சந்தத் தமிழ் பாடல் ஒன்று கமகம என்று பூத்து நிற்கும். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் திரையுலகைத் தம் கருத்து வளத்தாலும், சந்தக் கனத்தாலும் சந்தனச் சொல்லாலும், கலக்கிவிட்டுச் சென்ற எங்கள் தந்தையாரை நினைக்குந்தோறும் கண்கள் பனிக்கின்றன. நெஞ்சில் ஒரு கர்வமும் அது கலந்த பெருமிதமும் உதிக்கின்றன. - எங்களுக்கு அவர் ஏராளமான செல்வங்களை விட்டுச் செல்லவில்லை; அது பற்றிய ஏக்கமும் எங்களுக்கு இல்லை. கெளரவம் குன்றாமல் ix