பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாய்ப் பாட்டு ஜிலுஜிலு வென ஜொலிக்கும் மிட்டாய் திங்கர்து உங்கர்த லங்கிர்த மிட்டாய்! சீனாச் சக்கரை மிட்டாய் போனா வாராது, சிங்காரமான மிட்டாய் வாங்கலையோ மிட்டாய். மிட்டாய்! புத்தம் புதுசான மிட்டாய், பொம்பாய் மிட்டாய், பூனா மிட்டாய், புசிக்கத் தகுந்த மிட்டாய்! புகழ் வாய்ந்த பஞ்சு மிட்டாய்! தித்திப்பில் சிறந்த மிட்டாய், சீனியிலே செய்த மிட்டாய் சென்னைப் பட்டணத்தார்கள் தினமும் வாங்கி ருசிக்கும் மிட்டாய்! பால் குடிக்கிற குழந்தைங் கெல்லாம் சூப்பற மிட்டாய், பல்லில்லாத கிழவன் கிழவி சப்பற மிட்டாய்! பாலாலே செய்த மிட்டாய்! பைசா இல்லாப் பிள்ளைகளுக்கு பாட்டுண்டு மிட்டாயில்லை! சாமி கோயில் திருவிழா சந்து பொந்து தெருவெல்லாம் சந்தைக் கடையில் விக்கிற ஜவ்வு மிட்டாயி! மாமியாரைக் காணாமெ மருமகளும் வாங்கி வச்சு மறைவாகத் தின்கிற மிட்டாய் ஜவ்வு மிட்டாய் மிட்டாய் மிட்டாய்! இழுத்து விட்டா நீண்டுக்கும், சுருட்டி விட்டாச் சுருண்டுக்கும்! இருட்டில் தின்னாக் கூட இனிக்கும் - ஜோடி இல்லாமே சாப்பிட்டாத் தான் கசக்கும்: காலணாவை வீசி விட்டால் கைக் கெடிகாரம்; அரையனாவை விட்டெறிஞ்சா ஆணி முத்தாரம்: முக்காலணாக் கொடுத்தா முடிக் கலங்காரம்; முழுசா அனா கொடுத்தா அப்பத் தெரியும் நம்ம சமாச்சாரம் (ஜிலு ஜிலு) - நீதிபதி 174