பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு செய்வது ஆடை! ஆணும் பெண்ணும் அழகு செய்வது ஆடை ஆடை ஆடை மேலாடை ஆடை அடுத்தவன் பார்த்து ஆசைப் படுவது ஆடை ஆடை ... பட்டாடை ஆடை! மானங்காப்பதும் மதிப்புக் கொடுப்பதும் புடவே புடவே. வேட்டி. புடவே - இதை வாங்கி உடுத்திப் பரீட்சை பாரு - ஒரு தடவே தடவே... பப்பள பள பள பள பளிரெங்குது யார் புடவே? பளிரெங்குது யார் புடவே? - இதைப் பாட்டி கட்டினா குமரி போலே நோட்டங் காட்டும் பார் - புடவே நோட்டங் காட்டும் பார்! தப்பூ தப்புன்னு போட்டடிச்சா சுருங்கிப் போகாது - சரிகை சுருங்கிப் போகாது தண்ணியை விட்டுச் சாயம் வெளியே தாண்டிப் போகாது - சாயம் - தாண்டிப் போகாது இப்போது அந்த ரகத்தில் ஒண்ணே ஒண்னுதா இருப்பது ஒண்ணே ஒண்ணுதான் - இதை எளிய விலைக்கு விடப் போறேன்! வேணுமின்னுதா உங்களை வேணு மின்னுதா? இதைப் பார்த்தீங்களா? நாட்டிய மாடுகின்ற நட்சத்திரங்களெல்லாம் ஜோக்காப் போட்டுக் கொள்ளும் அங்கி! - சரிகை நாளைப் போகாது கசங்கி - இது அங்கி பசு மாட்டுத் தோலைப் போலிருக்கும்! .177