பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட்டுப் போட்டுக் கட்டுகின்ற முகம் மதியர்க் கேற்ற லுங்கி இந்நேர மெல்லாம் விட்டது பெரிசு! இப்ப விடப் போறது சிறிசு!! மூக்குப் பொடி போடுகின்ற மூளையுள்ள ஆள்களுக்கு முக்கியமாய் வேனு மிந்தக் கைக் குட்டை மூணு பணம் ஜோடி யொண்ணு வேணு மின்னா வாங்கிக் கோங்கோ! மூட்டை கட்டப்போறேன் இனிமே உட மாட்டேன்! ஏலம் உட மாட்டேன்!! உடமாட்டேன்!! (ஆணும்) - தூக்குத்துக்கி எல்லாம் மாயை தானா? எல்லாம் மாயை தானா? பேதை எண்ணம் யாவும் வீணா? ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்பம் காண்பேனா? (எல்லாம்) இணைபிரியாத சிநேகம் மறந்தனையோ? - உன்னை ஈன்றவர் சொல்லை மீறவும் பயந்தனையோ? - என் ஏழ்மையினாலே பிரேம கபாடம் தானே மூடியதோ? - விதி தான் விளையாடியதோ? (எல்லாம்) கனவிலும் மறவாக் காதல் நினைவுடனே - முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே - மன வேதனை என்னும் தீயதனால் நான் வெந்தே மாள்வதா? - இது நன்றோ தேவதாஸ்? (எல்லாம்) - தேவதாஸ் 178