பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வவ்வால் போலே வலுத்த கொம்புக்குத் தவ்வுடா - நீ தவ்வுடா இந்த வாழைப் பழத்தை வாயிலெ நல்லாக் கவ்வுடா - நீ நல்லாக் கவ்வுடா (ராம ராம) கண்ணாலே பாத்துப்புட்டு காசு கொடுக்காமே கம்பி நீட்டுகிற கனவான்களே! வேடிக்கே பாத்துப்புட்டு வேட்டியே ஒதறிக்கிட்டு வெளியே போகும் தனவான்களே! முதுகு மேலே அடியுங்கோ முகத்து மேலே அடியுங்கோ வவுத்து மேலே அடிக்காதீங்கோ - ஐயாமார்களே வவுத்து மேலே அடிக்காதீங்கோ (ராம ராம) - டாக்டர் சாவித்திரி ஆளை ஏய்க்காதே! பெண் : ஆசையாகப் பேசிப் பேசி ஆளை ஏய்க்காதே மாமா...! காசைப் பெரிசா நெனச்சி மனசைக் கஷ்டப் படுத்தாதே ஆமா! (கஷ்டப்) ஆண் பணத்தை எண்ணிக் கணக்குப் பாக்கும் மனுஷன் நானோடி? - பெண்ணே! குணத்துக்காக எதையும் செய்யும் குமணன் அல்லோடி? கண்ணே! (குமணன்) பெண் ; போடாத நகை என்ன போட்டே? - யாரும் போடாத நகை என்ன போட்டே? - இந்தப் பொய் வார்த்தை சொன்னாப் பொறுக்கவே மாட்டேன்! பாடகம் தண்டையோடு கொலுசு பீலி பழசையே மாத்தியே என்ன பண்ணினே - புதுசு? (ஆசை) - பைத்தியகாரன் 180