பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவோ பூவு பூ. பூவோ பூவு! பூவோ பூவு மணம் வீசும் புதிசான பூவு....! பொம்பளெ தலையில் வச்சா புருசன் வாடை பிடிக்கும் பூ! (பூவோ) தேவாலயம் தேரோட்டம் திருநாளில் விக்கிற பூ செவந்தி செண்பகப் பூ ஜாதிப் பூ மகிழம் பூ செந்தாழம் பூ மனோரஞ்சிதப் (பூவோ) கல்யாண மாப்பிள்ளை பெண்ணும் கையிலே பிடிக்கும் செண்டு! கச்சேரி பஜனைக் கெல்லாம் கதம்ப மாலை உண்டு! கட்டி வெச்ச மல்லிகை முல்லை மொட்டு! - எங் கைமுழ நீளம் ஒண்ணரைத் துட்டு வா! (பூவோ) கூத்துப் பாக்கும் பொம்பளை வக்கிற குண்டு மல்லிகைப் பூ - கடல் காத்து வாங்கும் பொம்பளை வக்கிற கனகாம்பரப் பூ - எம்ப் பூ - வாங்கலையா? வயசுப் பொண்டுகளெல்லாம் கண்டு மயங்கற பூ ... பூ. பூப்பூ....! மாடிமேலே இருக்கும் பெண்கள் தலையிலே வச்சா - கீழே வாசமடிக்கும் மந்தாரப் பூ வேணுமா? பூவு வேணுமா? கடைவீதியில் விக்கிற பூ காயிதப் பூ - அது கண்ணுக்கழகு வாசனையில்லா டுப்பு - இது கொடிப் பூ வளர் செடிப் பூ - தினம் கொண்டையி லிருந்தா மதிப் பூ (பூவோ) கோமான் மகள் வாங்கறது மரிக் கொழுந்து மலர்ந்த ரோஜா ஆசைக்கேத்த அழகுப் பூ அம்மாத்தா வாங்கும்பூ வாசம் மிகுந்த பூ மனதை மாத்தும் பூ மயக்கம் கொடுக்கும் மதன காம (பூவோ) - வனசுந்தரி 183